Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் கொள்முதல் துவக்கம்

நெல் கொள்முதல் துவக்கம்
சிவகங்கை , வெள்ளி, 23 ஜனவரி 2009 (14:00 IST)
தமிழக அரசு கொள்முதல் நிலையங்களில் சம்பா நெல் கொள்முதல் துவங்கியது.

விவசாயிகள் நலன் கருதி நடப்பு சம்பா பருவ நெல் கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் படி நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மறவமங்கலம், சாத்தரசன்கோட்டை, மானாமதுரை, ராஜகம்பீரம், மேலப்பசலை கட்டிக்குளம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கொந்தகை, திருப்புவனம், தஞ்சாக்கூர், இளையான்குடி, மித்ராவயல், திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிரேடு ஏ சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு ஆதார விலை ரூ.880, மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.170 ஆக மொத்தம் ரூ.1.050 வழங்கப்படுகிறது.

சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசின் ஆதார விலை ரூ.88, மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.150 மொத்தம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள், நெல்லை மேற்கண்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயன் பெறலாம் என்று சிவகங்கை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil