போடியில் அமைந்துள்ள ஏலக்காய் விற்பனை சந்தையில், ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது.
போடியில் அமைந்துள்ள ஏலக்காய் சந்தையில் தான், முதன்முறையாக கணினி மூலம் ஏலக்காய் ஏலம் நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலக அளவிலான ஏலக்காய் வர்த்தகத்தில் போடி ஏலக்காய் மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஏலக்காயை பல்வேறு மாநிலங்களை சேர்நத வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் ஆர்வமாக வாங்குகின்றனர்.
ஏல விவசாயிகள் சங்க ஏல மையத்தில் சென்ற திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 30 ஆயிரம் கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்டது. இது முந்தைய ஏலத்தை விட 4 ஆயிரம் கிலோ அதிகம்.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஏலத்தில் ஏலக்காய் விலையாக அதிகபட்சமாக கிலோ ரூ. 578 ஆக இருந்தது. இதன் குறைந்தபட்ச விலை ரூ. 357 ஆக இருந்தது.
ஏலக்காய் சராசரி விலை கிலோ ரூ. ரூ.441. இது முந்தைய ஏலத்தை விட ரூ.10 உயர்வு.