Publish Date: Thu, 22 Jan 2009 (11:15 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (10:52 IST)
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது மேலும் பத்து நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு, 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் அடிப்படியில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தண்ணீர் திறந்து விடும் நாட்கள் முடிவடைந்துவிட்டன.
விவசாயிகள் தண்ணீர் திறப்பது நிறுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதனஐ ஏற்று மேலும் 10 நாட்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.