Publish Date: Wed, 21 Jan 2009 (17:04 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (17:04 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தகத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ளும் திட்டம் இல்லை என்று உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதிக்கு வரி விதிக்கும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று பவார் கூறியுள்ளார்.