Publish Date: Tue, 20 Jan 2009 (17:51 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (17:51 IST)
இந்திய ஆயுள் காப்பீட்டு வீட்டுக் கடன் நிறுவனம், கடந்த 2008 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுற்ற 3வது காலாண்டில் ரூ.134.33 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.766.66 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே காலாண்டில் நிகர வருவாய் ரூ.549.99 கோடியாக இருந்தது.