Publish Date: Tue, 20 Jan 2009 (14:10 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (13:40 IST)
மத்திய அரசு மாவு மில் ஆலைகள், வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் கோதுமை அளவை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. இதனை ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்கிறது. அவசர கால இருப்பிற்கு போக உபரியாக உள்ள கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனை செய்கிறது.
இதன் படி மாவு ஆலைகள், மொத்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் கோதுமையின் அளவை 27.500 டன் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. முன்பு 9.72 லட்சம் டன் மட்டுமே விற்பனை செய்வது என முடிவு செய்திருந்தது.
இந்த கோதுமையை மத்திய அரசு சார்பின் இந்திய உணவு கழகம் பகிரங்க விலைப்புள்ளி (டெண்டர்) சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்து வருகிறது. இதற்கு வர்த்தகர்கள், மாவு மில்களிடம் அதிக வரவேற்பு இருப்பதுடன், அதிக எண்ணிக்கையில் விலைப்புள்ளிகளும் வந்துள்ளன.
இதன்படி டில்லி மாநிலத்திறக்கு கூடுதலாக 1 லட்சம் டன், தமிழகத்திற்கு 30 ஆயிரம் டன், கர்நாடாகவுக்கு 25 ஆயிரம் டன், அஸ்ஸாமிற்கு 20 ஆயிரம் டன், ஹரியானா, பஞ்சாப், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு தலா 10 ஆயிரம் டன் விற்பனைக்கு ஒதுக்கப்படும்.
அதே நேரத்தில் மாகராஷ்டிரா மாநிலத்திற்கான ஒதுக்கீடு 45 ஆயிரம் டன், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் ஒதுக்கீடு தலா 30 ஆயிரம் டன், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு தலா 20 ஆயிரம் டன் குறைக்கப்படும்.
தற்போது கூடுதலாக விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோதுமை, இந்திய உணவு கழகம், பகிரங்க விலைப்புள்ளி மூலம் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (14:10 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (13:40 IST)