நாட்டுக் கோழி வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் ஜனவரி 28, 29ம் தேதிகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.
இதில் கோவை மாவட்ட விவசாயிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடையுமாறு பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ரா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.