பரமக்குடி: நயினார்கோவில் வட்டார வேளாண்மை மையத்தில், மானிய விலையில் பருத்தி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றது.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் தி.நா.திருமலைவாசன் சனிக்கிழமை கூறுகையில், மாசிப் பட்டத்தில் விதைப்பு செய்வதற்கு ஏற்ற எஸ்.வி.பி.ஆர்-2 பருத்தி ரக சான்று விதைகள், தீவிர பருத்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 விழுக்காடு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ரகம் வறட்சியை தாங்கக்கூடியது. கோடைகால இறவை பட்டத்திற்கு ஏற்றது. இந்த பருத்தி ரக சான்று விதைகள் நயினார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், மற்றும் பிற வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.