மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யம். இவை பங்குகளை விற்பனை செய்யாது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இதனால் வங்கிகள் டாலரை விற்பனை செய்தன.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.79 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 26 குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.03-49.05 பைசா.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.79 முதல் ரூ.49.01 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.77 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.64.71
100 யென் மதிப்பு ரூ.53.97
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.72.54.