Publish Date: Tue, 13 Jan 2009 (13:53 IST)
Updated Date: Tue, 13 Jan 2009 (13:53 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.92 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 8 அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.84 பைசா.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.76 முதல் ரூ.48.96 என்ற அளவில் இருந்தது.
பங்குச் சந்தையலில் காலையில் இருந்த நிலைமை மாறியதால், அந்நியச் செலவாணி சந்தையிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தது. ஆனால் மறற நாட்டு செலவாணிகளுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு நிகரான டாலரின் மதிப்பும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.91 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.64.90
100 யென் மதிப்பு ரூ.72.10
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.54.73.
Webdunia
Publish Date: Tue, 13 Jan 2009 (13:53 IST)
Updated Date: Tue, 13 Jan 2009 (13:53 IST)