டிசம்பர் மாதம் கார் விற்பனை 6.9 விழுக்காடும், மோட்டார் பைக், ஸ்கூட்டர் விற்பனை 22.9 விழுக்காடும் குறைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில் 82,105 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது 2007 டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 6.9% குறைவு.
(2007 டிசம்பர் விற்பனை 88,272).
டிசம்பர் மாதம் 3,35,820 மோட்டார் பைக்குள் விற்பனையாகி உள்ளது. இது 2007 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 22.9% குறைவு. (2007 டிசம்பர் விற்பனை 4,35,925).
மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டி, மொபெட் போன்ற எல்லா இரு சக்கர வாகனங்களையும் சேர்த்தால் மொத்தம் 4,61,302 விற்பனையாகியுள்ளது.
இது சென்ற வருடம் டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 15.4% குறைவு.
வேன், லாரி, டிரக் போன்றவைகளின் விற்பனை 58.2 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ரகத்தில் அடங்கும் வாகனங்கள் டிசம்பர் மாதத்தில் 17,920 விற்பனையாகி உள்ளளது.
(இது சென்ற வருடம் டிசம்பர் மாத விற்பனை 42,961),
இந்த தகவல்களை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. [Society of Indian Automobile Manufacturers (SIAM)].