Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யம் கம்ப்யூ இயக்குநர்கள்- அரசு நியமனம்.

சத்யம் கம்ப்யூ இயக்குநர்கள்- அரசு நியமனம்.
புது டெல்லி: , சனி, 10 ஜனவரி 2009 (12:47 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், இதில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளது.


இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறையில் நான்காவது இடத்தில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்
ஹைதராபாத்தை தலையிடமாக கொண்டு இயங்குகிறது. இதன் கணக்குகளில் ரூ.7,000 கோடி அளவிற்கு தவறான கணக்கு காண்பித்து உள்ளதாக சேர்மன் ராமலிங்க ராஜு, பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். தனது சேர்மன் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். இதை தொடர்ந்து இவரது தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜுவும் பதவியை ராஜினமா செய்தார். தற்காலிகமாக தலைமை நிர்வாக அதிகாரியாக ராம் மயாம்பதி பொறுப்பேற்று கொண்டார். இதன் இயக்குநர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் முறைகேடுகள் குறித்து மாநில சி.பி-சி.ஐ.டி காவல் துறை விசாரிக்கும் என்று ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தெரிவித்து இருந்தார். இதன் மீது யாரும் புகார் அளிக்காவிட்டாலும், தன்னிச்சையாக மாநில காவல் துறை விசாரிக்கும் என்று அறிவித்து இருந்தார். சிபி-சிஐடி அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

இதே போல் பங்குச் சந்தையை கண்கானிக்கும் அமைப்பான செபியும் விசாரணை மேற்கொள்ள உயர் அதிகாரிகளை ஹைதராபாத்திற்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்துள்ள தொழில், வர்த்தக நிறுவனங்களை கட்டுப்படுத்தும், கம்பெனி லா போர்ட், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசுக்கு நேற்று அனுமதி வழங்கியது.

இதன்படி மத்திய அரசு எவ்வித இடையூறு இன்றி நிர்வாக பணிகள் சுமுகமாக நடைபெற புதிதாக 10 இயக்குநர்களை நியமிப்பதாக அறிவித்து.

இதன்படி மத்திய அரசு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள வகை செய்கிறது. அதே நேரத்தில் தற்போது இயக்குநர்களாக இருப்பவர்களும், இயக்குநர்களாக தொடருவார்கள் என்று அறிவித்துள்ளது.

இதனால் இன்று நடப்பதாக இருந்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. புதிய இயக்குநர்களை மத்திய அரசு அடுத்த சில நாட்களில் அறிவிக்கும். இந்த புதிய இயக்குநர்களின் கூட்டம் ஏழு நாட்களுக்குள் நடைபெறும்.

செபியின் விதி முறைகளின் படி இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிக்கான (அக்டோபர்-டிசம்பர்) இலாப-நஷ்ட கணக்கு ஜனவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும். இதை புதிய இயக்குநர்கள் குழு தயாரிப்பதுடன், முந்தைய மூன்று மாதத்திறாகான இலாப-நஷ்ட கணக்கு அறிக்கையை மறுபரிசீலனை செய்யும்.

இந்நிலையில் செபியின் அதிகாரிகள் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பல ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

மத்திய நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் பிரேம் சந்த் குப்தா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இயக்குநர்களாக, கூடிய விரைவில் தகுதியானவர்களை நியமிப்போம். இதில் நடைபெற்ற நிதி முறைகேடுகளை பற்றி ஹைதராபாத்தில் இருக்கும் கம்பெனி பதிவு துறை [Registrar of Companies-(RoC)] விசாரித்து வருகிறது. இதன் அறிக்கையை ஜனவரி 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பிறகே, இதன் மோசடி குறித்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பணிகள் சுமுகமாக நடைபெற என்ன செய்யலாம் என்று அரசு தரப்பில் இருந்து நசோசெம் அமைப்பின் முன்னாள் தலைவர் கிரன் கர்நாக்கின் ஆலோசனை கேட்கப்பட்டதாக தெரிகிறது. இவர் புதிய இயக்குநர் குழுவில் இடம் பெறுவாரா என்று தெரியவில்லை. இவரிடம் இயக்குநர் குழுவில் இடம் பெறுவீர்களா என்று கேட்டதற்கு, பதில் கூற மறுத்து விட்டார். அதே நேரத்தில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் எடுத்துள்ள நடவடிக்கை சரியானதுதான். இதற்கு முன் மத்திய அரசு தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள நிறுவனத்தை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தேசிய உடைமை ஆக்கிக் கொள்வதற்கு சமமானது என்று தெரிவித்தார்.

ஹெச்.டி.எப்.சி வங்கி சேர்மன் தீபக் பரேக் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இவர்களின் முதல் பணி, சத்யம் கம்ப்யூட்டரின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதும், ஊழியர்களின் நலன் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆந்திர மாநில காவல்துறை தலைமை இயக்குநர் முன்பு நேற்று இரவு ராமலிங்க ராஜு சரணடைந்தார். இவர் இன்று செபியின் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜர்படுத்தப்படுவார். செபி உயர் அதிகாரிகள் ராமலிங்க ராஜுவிடம் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணையின் அறிக்கையில் பல உண்மைகள் வெளியாகும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil