Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கம் 5.91% ஆக குறைவு

பணவீக்கம் 5.91% ஆக குறைவு
புது டெல்லி , வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:57 IST)
பணவீக்கம் டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.91 விழுக்காடாக குறைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் 6.38% ஆக இருந்தது. கடந்த பத்து மாதத்தில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் குறைந்துள்ளது.

ஆனால் சென்ற வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் பணவீக்கம் 3.83% ஆக இருந்தது.

பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை அட்டவணையில் உள்ள சோளம் விலை 5%, பழம், காய்கறிகள் விலை 3%,, முட்டை விலை 1% குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது. பாலியெஸ்டர் நூல் விலை 2%,, நியுஸ் பிரிண்ட் விலை 1% குறைந்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் விலை, சிமெண்ட், உருக்கு விலைகளில் மாற்றம் இல்லை.

அதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் 14%, நாட்டு சர்க்கரை 2%,, கடலை எண்ணெய் விலை 2%, சிறு தானியங்கள் விலை 0.2% அதிகரித்துள்ளது.

சென்ற வருடம் பணவீக்கம் அதிக பட்சமாக 12.91% இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil