இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் வங்கிகளின் பங்குகள் இன்று காலை 7 விழுக்காடு வரை உயர்ந்தன.
மந்தமான பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுகை அறிவிப்புக்களை அடுத்து வங்கிகளின் பங்குகள் இன்று உயர்வு கண்டன.
எஸ்.பி.ஐ. 2.26 விழுக்காடும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1.05 விழுக்காடும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2.46 விழுக்காடும் உயர்ந்தன.