பெங்களூர்: சிண்டிகேட் வங்கி வைப்பு நிதிக்கான புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
இதன்படி 15 நாள் முதல் 45 நாட்கள் வரையிலான ரூ.1 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 4.75 விழுக்காடு வட்டியும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 6 விழுக்காடு வட்டியும் வழங்கப்படும்.
இதே போல் 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு 7.25 விழுக்காடு, 180 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான வைப்புத் தொகைக்கு 8.50 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.
அத்துடன் 1 வருடம் முதல் 499 நாட்கள் வரை வைக்கப்படும் வைப்புத் தொகைக்கு 8.75 விழுக்காடு வட்டியும், 500 நாட்கள் முதல் 2 ஆண்டுவரையான வைப்புத் தொகைக்கு 9.10 விழுக்காடும், 2 ஆண்டு முதல் 5 ஆண்டுவரையிலான வைப்புத் தொகைகளுக்கு 8.75 விழுக்காடும், 5 ஆண்டுகளுக்கு மேல் வைக்கப்படும் வைப்பு தொகைக்கு 8.50 விழுக்காடு வட்டியும் கொடுக்கப்படும்.
இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் (ஜனவரி 5) முதல் அமலுக்கு வருகிறது. என்று சிண்டிகேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.எஸ். நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.