மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 38 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.58 பைசா.
வெள்ளிக் கிழமையும் ரூபாயின் மதிப்பு 18 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல சலுகைகளை அறிவித்துள்ளன. அத்துடன் இன்று இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருப்பதால் அந்நியச் செலவாணி சந்தையில் ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.15 முதல் ரூ.48.41 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.37 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.67.32
100 யென் மதிப்பு ரூ.52.61
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.17.