Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டுச் சேலை வடிவமைப்பு விருது

பட்டுச் சேலை வடிவமைப்பு விருது
, சனி, 3 ஜனவரி 2009 (10:55 IST)
காஞ்சிபுரம்: பட்டுச் சேலையில் சிறந்த வடிவமைப்புக்காக, காஞ்சிபுரம் பட்டுத்தறி அதிபருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வடிவமைப்புகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-06 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான அச்சுதராவ், 1985 ஆம் ஆண்டு முதல் பட்டுச் சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் அச்சு ராயல் சில்க் சாரீஸ் என்ற பெயரில் பட்டுச் சேலைகளை தயாரித்து வருகிறார்.

இவர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சை லட்சுமி விலாஸ் தர்பார் மண்டபத்தில் உள்ள துகிலின் சித்திர வடிவத்தை பட்டுச் சேலையில் வடிவமைத்தார். அத்துடன் யாளி, கமலம், நெளி, முத்து, ூ, மொக்கு, பனாரஸ் வடிவங்களும் சேலையில் இடம் பெற்றுள்ளன. இச்சேலையை முப்பாகச் சேலை எனவும் அழைப்பர்.

முப்பாகச் சேலையின் உடற்பகுதி மூன்று வண்ணங்களால் ஆனது. இரண்டு முந்திகள், இரண்டு வண்ணங்கள் இந்திய பாரம்பரிய கைத்தறியின் சிறப்பாகும்.

இச்சேலை முழுவதும் கை நெசவு, பட்டு மற்றும் ஜரிகையால் நெய்யப்பட்டது.

சேலை மத்திய ஜவுளித் துறையால் சிறந்த வடிவமைப்புக்காக முப்பாகச் தேர்வு செய்யப்ட்டது. இதற்காக அச்சுதராவிற்கு தாமிரப் பத்திரம், ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழை, அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், விருதை பட்டுத் தறி அதிபர் அச்சுதராவுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil