நாட்டின் பணவீக்க விகிதம் டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.38% ஆக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 6.61% ஆக இருந்தது.
கடந்த 8 வாரங்களாக பணவீக்க விகிதம் தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. எரிபொருட்கள், உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணிவீக்கம் சரிந்ததற்கு காரணம் என மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தேயிலை, பழங்கள், காய்கறிகள், உணவுக்கு நறுமணமூட்டப் பயன்படும் வாசனைப் பொருட்கள், பருப்பு, உப்பு, இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறிப்பிதத்தக்க அளவு குறைந்துள்ளது.