மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று மாலை இருந்த நிலையிலேயே இருந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.40-48.42 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 2 பைசா அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.42 பைசா.
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி, அந்நிய முதலீட்டாளர்கள், வங்கிகள் அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. இதனால் அதிக அளவு வேறுபாடு இல்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் யூரோ, ஸ்வீஸ் பிராங்க் நாணயங்களுக்கு நிகரான டாலரின் விலை குறைந்தது.
இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் ஏற்றம் காணப்பட்டது. அதே நேரத்தில் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 40 டாலருக்கும் குறைவாக இருந்தது.
இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.40 முதல் ரூ.48.62 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.50 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.67.95
100 யென் மதிப்பு ரூ.53.67
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.02.