புது டெல்லி: புது வருடத்தில் இருந்து விமான பயணிகள் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்துள்ளன.
தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், உள்நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் எகனாமி வகுப்பு விமான கட்டணத்தை 40 விழுக்காடு குறைத்துள்ளதாக நேற்று அறிவித்தது.
இதே போல் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைய்ஸ் ஜெட் நிறுவனமும் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கட்டண குறைப்பு பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.
கிங்பிஷர் ஏர்வேஸ் நிறுவனமும் புது வருடத்தில் இருந்து விமான கட்டணத்தை குறைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஏர்-இந்தியா, கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைய்ஸ் ஜெட் ஆகியவை, கூடுதல் கட்டணமாக வசூலித்து வந்ததில் 1 டிக்கட்டிற்கு ரூ.400 குறைத்தன.
விமான பெட்ரோலின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், தற்போது விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து வருகின்றன.