Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிற்பேட்டைகள் ரியல் எஸ்டேடாக மாறமல் இருக்க விதி

தொழிற்பேட்டைகள் ரியல் எஸ்டேடாக மாறமல் இருக்க விதி
, புதன், 24 டிசம்பர் 2008 (15:25 IST)
புதுக் கோட்டை: தொழிற்பேட்டைகள், ரியல் எஸ்டேட்களாக மாறமல் இருக்கும் வகையில், புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக சிட்கோ மேலாண்மை இயக்குநர் டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சிறு தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) சார்பில் புதிய தொழிற் பேட்டை அமைக்கப்படுகிறது. இதில் தொழிலகங்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், நேற்று தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சிட்கோ மேலாண்மை இயக்குநர் டி.ராஜேந்திரன் பேசுகையில், தொழிற்பேட்டைகளின் வளர்ச்சிக்காக, இவை ரியல் எஸ்டேட்களாக மாறாமல் இருக்கும் வகையில் சிட்கோ புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்கூடங்களை விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ முடியாது. தொழிற்கூடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் தொழில் தொடங்க வேண்டும். மொத்த நிலத்தின் பரப்பளவில் குறிப்பிட்ட அளவு தொழிற்சாலை கட்ட வேண்டும். தொழிற்பேட்டைகளின் விலையை குறிப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இங்கு தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். இதே போல் தொழில் முனைவோர் ஆர்வத்தை பொறுத்து காரைக்குடி, எலாம்பலூர், ஆசனூர் ஆகிய ஊர்களில் தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்.

சிட்கோ சார்பில் தொழிலாளர்களின் திறனை அதிகப்படுத்த பயிற்சி நிலையம் தொடங்கப்படும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil