Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரும்பு கம்பிக்கு இறக்குமதி வரி ?

Advertiesment
உருக்கு இரும்பு செயில் டாடா ஸ்டீல் ஜின்டால் ஸ்டீல்
, திங்கள், 22 டிசம்பர் 2008 (18:25 IST)
புது டெல்லி: உள்நாட்டு உருக்கு, இரும்பு ஆலைகளின் நஷ்டத்தை தவிர்க்க, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு கம்பி, பாளங்கள் போன்றவைகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

உலக சந்தையில் உருக்கு, இரும்பு தாது விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. முன்பு சீனா பெருமளவு உருக்கு, இரும்பு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தடை ஏற்பட்டுள்ளது. இதே வேறு சில நாடுகளின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

இந்த நாடுகள் அதிக அளவு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. முன்பு உள்நாட்டில் ஏப்ரல் மாத வாக்கில் இரும்பு கம்பி, பாளம் போன்ற பொருட்களின் விலை டன் ரூ.48 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது இதன் விலை டன் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் என்ற அளவில் குறைந்துவிட்டது.

அயல்நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு பொருட்களின் விலையுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. உள்நாட்டு உருக்காலைகள் 10 விழுக்காடு உற்பத்தி வரி கட்டுகின்றன. இது போன்ற வரிகள் இல்லாத காரணத்திலனாலும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இல்லாத காரணத்தால், மற்ற நாடுகள் இந்தியாவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றன.

இவ்வாறு இறக்குமதியாகும் இரும்பு பொருட்களின் விலை, உள்நாட்டு தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதால் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால் உள்நாட்டு உருக்காலைகள் பாதிக்கப்படுவதாகவும், இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படு வேண்டும் என்று கோரி வருகின்றன.

இது தொடர்பாக கடந்த வாரம், பிரமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஷ்வான் கவுன்டர்வாலிங் டூட்டி எனப்படும் இறக்குமதி வரியை 10 விழுக்காடு விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வரி விதிப்பது பற்றி நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த வரி விதிக்கப்படுவதால் செயில் எனப்படும் இந்திய உருக்கு ஆணையம், டாடா ஸ்டீல், ஜின்டால் ஸ்டீல் உட்பட உள்நாட்டு உருக்காலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil