Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காப்பீடு திருத்த மசோதா அறிமுகம்

காப்பீடு திருத்த மசோதா அறிமுகம்
, திங்கள், 22 டிசம்பர் 2008 (16:48 IST)
புது டெல்லி: மாநிலங்களவையில் இன்று பலத்த அமளிக்கு இடையே காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை இரண்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணியளவில் மாநிலங்களவை கூடியதும், அவைக்கு தலைமை வகித்த துணை தலைவர் ரஹ்மான் கான், நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சாலை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய மசோதைவை தாக்கல் செய்யும் படி அழைத்தார்.

அமைச்சர் பி.கே.பன்சால் மசோதாவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அமையின் மைய பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். சிலர் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தனர்.

அதே நேரத்தில் அமைச்சர் பன்சால் மசோதைவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமைச்சரிடம் இருந்து, மசோதாவை பிடுங்க முயற்சித்தார்.

அயல் உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களை தள்ளிவிட்டார். மற்றொரு அமைச்சரான மீரா குமார் முன்வரிசைக்கு சென்று அமைச்சருக்கு முன் நின்று கொண்டு அவர் மீது தாக்குல் நடக்காதபடி காப்பாற்றினார்.

இதனிடையே அமைச்சர் பன்சால் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்த வகை செய்கிறது.

மாநிலங்களவையில் காப்பீடு திருத்த மசோவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிறகு மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக, துணைத் தலைவர் ரஹ்மான் கான் அறிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, காப்பீடு திருத்த மசோதைவை முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. மத்திய அரசுக்கு அரசின் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. இடதுசாரி கட்சிகள் ஜீலை மாதம் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.

எல்.ஐ.சி திருத்த மசோத


இதே போல் மக்களவையில் அரசு, இந்திய காப்பீடு கழக ( எல்.ஐ.சி ) திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோதா, இந்திய காப்பீடு கழகத்தின் மூலதனத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக அதிகரிக்க வகை செய்கிறது.

இந்த மசோதைவை எதிர்த்த இடதுசாரி உறுப்பினர்கள், இந்த மசோதாவில் உள்ள சில ஷரத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த திருத்தம் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு உதவி செய்யவே கொண்டுவரப்படுகிறது என்ற குற்றம் சாட்டினர்.

இதை அறிமுகம் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்து வெட்டு தீர்மானம் கொண்டுவந்தார். இதன் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார்.

ஏ.ஆர். அந்துலே விவகாரம் தொடர்பாக மக்களவையின் மையப்பகுதியில் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் வெட்டு தீர்மானம் தோல்வியடைந்தது. வெட்டு தீர்மானத்திற்கு எதிராக 106 வாக்குகளும், தீர்மானத்திற்கு ஆதராக 39 வாக்குகளும் கிடைத்தன.

இதையடுத்து வர்த்த துறை இணை அமைச்சர் பி.கே.பன்ஷால், இந்திய காப்பீடு கழக திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இதன் படி இந்திய காப்பீடு கழகத்தின் மூலதனத்தை அதிகரிப்பதுடன், இதன் பாலிசிகளுக்கு மத்திய அரசின் ஆணை மூலமாக அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவும் வகை செய்கிறது.

அத்துடன் இந்திய காப்பீடு கழகத்திற்கு கிடைக்கும் இலாபத்தில் 90 விழுக்காடு, பாலிசிதாரர்களின் நலனுக்காக தனியாக பராமரிக்கப்படும். இந்த நிதியை கையாள்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். மீதம் உள்ள 10 விழுக்காடு இதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு ஈவு தொகையாக வழங்கப்படும். இதற்காக காப்பீடு கழகத்தில் தனித்தனியாக இரண்டு கணக்குகள் பராமரிக்கப்படும்.

இந்த மசோதாவின் படி, இந்திய காப்பீடு கழகத்தின் தேவைக்கு தகுந்தாற்போல், இதன் மூலதனத்தை அதிகரிக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விதிப்படி, இந்தியாவில் இயங்கும் அரசுக்கு சொந்தமான. தனியாருக்கு சொந்தமான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு நிறுவனங்களின் குறைந்தபட்ச மூலதனம் ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil