Newsworld Finance News 0812 22 1081222018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 14 பைசா சரிவு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
, திங்கள், 22 டிசம்பர் 2008 (13:55 IST)
ரூபாய் மதிப்பு 14 பைசா சரிவு

மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.40-47.41 ஆக அதிகரித்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 14 பைசா உயர்வு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.47.26 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.47.32 முதல் ரூ.47.45 வரை இருந்தது.

இன்று ஆசிய நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்திப்பதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.39 பைச
1 யூரோ மதிப்பு ரூ.66.33
100 யென் மதிப்பு ரூ.52.70
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.65.

Share this Story:

Follow Webdunia tamil