Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோஷலிச முறை மாற்றப்படாது-சீனா

சோஷலிச முறை மாற்றப்படாது-சீனா
, சனி, 20 டிசம்பர் 2008 (12:08 IST)
பீஜிங்: பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், சீனா பொருளாதார சீர் திருத்த கொள்கைகளை மேற்கொள்ளும்.

ஒரு காலத்தில் வறுமையில் சிக்கித் தவித்த சீனாவை, உலகின் பொருளாதார பலத்தில் நான்காவது இடத்திற்கு உயர்த்திய சோஷலிச பொருளாதார முறையை அயல் நாடுகளின் நிர்ப்பந்த்திற்கு அடிபணிந்து மாற்றாது என்று சீன அதிபர் ஹீ ஜின்டோ கூறினார்.

சீனாவில் பொருளாதார சீர்திருதம் தொடஙகப்பட்ட 30 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அந்நாட்டு அதிபருமான ஹீ ஜின்டோ பேசும் போது, சீனாவில் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும், அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதித்ததும் மிக சரியான நடவடிக்கை என்று நிருபணமாகியுள்ளது என்று கூறினார்.

சீனாவில் முப்பது வருடங்களுக்கு முன்பு அதிபராக இருந்த டெங் ஜியோபிங் எடுத்த தைரியமான முடிவால், பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், வர்த்தகம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டன. அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் டெங் ஜியோபிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருபுவாதம், சோஷலிச முறையில் இருந்து முதலாளித்துவ முறைக்கு தாவல் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, 1978 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, சீன கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கொடுத்தது.

இந்த நிகழ்ச்சிகளை நினைவு படுத்தும் விதமாக ஹீ ஜின்டோ பேசுகையில், சீனா முன்னேற்றம் அடைந்துள்ளதற்கும், எல்லா சாதனைகளுக்கும் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தான் காரணம். அதே நேரத்தில் சீனா, அதன் வழியிலேயே இயங்கும். அயல்நாட்டு நிர்ப்பந்தங்களுக்கு ஒரு போதும் அடியணியாது.

சீனா, உலகின் ஒவ்வொரு நாடுகளின் எதிர்காலமும், சீனாவின் எதிர்காலமும் ஒன்றை மற்றொன்று சார்ந்து உள்ளது. அதே நேரத்தில் உலக மயமாக்கல் கொள்கையை பின்பற்றும் போது. சீனா தனித்தன்மையை கடைபிடிக்கும்.

சீனா போன்ற முன்னணி சோஷலிச நாட்டிற்கு, சுதந்திரமாக இயங்குவதும் சுயசார்பு அடைவதும் வளர்ச்சிக்கான அடிப்படைகளாகும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் 6 ஆயிரம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil