Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு

ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:56 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.20 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 25 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.46.95-46.96 பைசா.

பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.46,97 முதல் ரூ.47.30 என்ற அளவில் இருந்தது.

நேற்று கடந்த பதினோறு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு 71 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.68 பைச
1 யூரோ மதிப்பு ரூ.66.98
100 யென் மதிப்பு ரூ.52.78
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.71.17.

Share this Story:

Follow Webdunia tamil