Publish Date: Wed, 17 Dec 2008 (17:00 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ரூ.800 கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்தியில், "மொத்தம் ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை-கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 23ஆம் தேதி நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.