Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 61 பைசா உயர்வு

Advertiesment
ரூபாய் மதிப்பு 61 பைசா உயர்வு
, புதன், 17 டிசம்பர் 2008 (13:48 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.30 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 61 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.47.91 பைசா.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாதல், இந்திய பங்குச் சந்தைகளிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர். மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பும் குறைந்தது. இது போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.47.30 முதல் 47.46 என்ற அளவில் விற்பனை ஆனது.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.33 பைச
1 யூரோ மதிப்பு ரூ.66.69
100 யென் மதிப்பு ரூ.52.64
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.73.92.

Share this Story:

Follow Webdunia tamil