கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அனைத்து பொருட்களுக்கான மொத்த விலை குறியீட்டெண் 0.04 விழுக்காடு சரிந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 233.7 புள்ளிகளாக இருந்தது. இந்த குறியீட்டெண் மேற்குறிப்பிட்ட வாரத்தில் 233.6 புள்ளிகளாகும்.
வருடாந்திர பணவீக்க விகிதம், நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8 விழுக்காடாக இருந்தது. முந்தைய வாரத்தில் இது 8.40 விழுக்காடாகவும், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 3.89 விழுக்காடாகவும் இருந்தது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.