Newsworld Finance News 0812 06 1081206068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு

Advertiesment
ரிபோ ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரிபோ தேசிய வீட்டு வசதி வங்கி சிறு தொழில் வளர்ச்சி வங்கி சிட்பி
, சனி, 6 டிசம்பர் 2008 (16:07 IST)
மும்பை: பணவீக்கம் குறைந்து வரும் நேரத்தில், தொழில், வர்த்தக துறையினருக்கு எளிதில் கடன் கிடைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இன்று, வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டியை குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வர்த்தக வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரிபோ) 1 விழுக்காடு குறைத்துள்ளது.

முன்பு ரிபோ வட்டி விகிதம் 7.5 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி குறையும்.

இதே போல் வங்கிகள் தங்களிடம் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் (ரிவர்ஸ் ரிபோ). இதற்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதம் 6 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று மும்பையில் செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்தார்.

இதன் மூலம் நிதி சந்தையில் ரூ.3 லட்சம் கோடி வரை பணப்புழக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுப்பாராவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மும்பையில் நவம்பர் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதலால், இந்தியாவின் தொழில், வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படாது என்று நம்பிக்கை தெரிவித்த சுப்பாராவ், இதனால் எந்த அளவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பிடுவது சிரமம். இந்த தாக்குதலின் பாதிப்புகளில் இருந்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது இது போன்ற சம்பவங்களால் அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களின் மன உறுதி சீர்குலையாது.

இந்திய பொருளாதாரம் பலம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்ந்து, முதலீட்டார்களிடம் நம்பிக்கை ஏற்படும் போது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் விரைவாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அது வரை ஏற்படும் சிரமத்தை தாங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.

தற்போது வங்கிகளின் இருப்பு விகிதம் குறைக்கப்படவில்லை. ஏனெனில் குறுகிய காலத்திற்குள் 9 விழுக்காடாக இருந்த வங்கிகளின் இருப்பு விகிதம், 5.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நிதி சந்தையில் பணப்புழக்கத்தின் அளவை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றோம். இதில் சிரமம் ஏற்படும் போது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பணப்புழக்கம் தேவையான அளவு உள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி கால் மணி வட்டி விகிதம் 19.7 விழுக்காடாக இருந்தது. இது டிசம்பர் 5 ஆம் தேதி 6.1 விழுக்காடாக குறைந்துள்ளது. நவம்பர் 3 ஆம் தேதியில் இருந்து இதன் வட்டி விகிதம் 6 முதல் 7.5 விழுக்காடாக உள்ளது. இதில் இருந்து பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி மற்ற நாடுகளிலும், உள்நாட்டிலும் நிதி சந்தையை கண்காணித்து வருகிறது. தேவைப்படும் போது தாமதம் இல்லாமல் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து அந்நிய செலவாணி மாற்று விகித பத்திரங்களை வாங்க குறிப்பிட்ட வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கும்.

வீட்டு வசதி கடன் அதிகப்படுத்தவும், இதன் வட்டியை குறைக்கும் வகையில் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

இதனால் தற்போது ஏறக்குறைய எவ்வித வேலைகளும், வியாபாரமும் இல்லாமல் இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு தேவையான கடன் கிடைக்கும். அதே போல் வீட்டு கடனும் எளிதாக கிடைப்பதுடன் வட்டி குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து, மற்ற வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள், சலுகை வட்டியில் கடன் வாங்குகின்றன. இந்த கடனை பயன்படுத்தி வீடு வாங்குவதற்கும், கட்டுவதற்கும் கடன் கொடுக்கின்றன.

இந்த கடன் வழங்கும் நடைமுறைகள், அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதே போல் சிறு, குறு தொழில் பிரிவுகளுக்கு எவ்வித சிரமம் இன்றி கடன் கிடைக்க, ரிசர்வ் வங்கி, சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (சிட்பி) ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

சிட்பி வங்கியிடம் இருந்து வங்கிகள், வங்கி சார நிதி நிறுவனங்கள், மாநில நிதி நிறுவனங்கள் போன்றவை சலுகை வட்டியில் கடன் வாங்கி, சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil