Publish Date: Sat, 06 Dec 2008 (12:06 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (12:05 IST)
புது டெல்லி: மத்திய அரசு பொருளாதார மந்த நிலையை மாற்றி, புத்துயிர் ஊட்ட பல்வேறு சலுகைகளை நாளை அறிவிக்கும் என்று தெரிகிறது.
ரிசர்வ் வங்கி அறிவிக்கும் சலுகைகளுடன், மத்திய அரசும் நாளை பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று பிரதமர் அலுவலகம் அறிவிக்கும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குக சலுகை அளிக்கும் வகையில், பல்வேறு பொருட்களின் உற்பத்தி வரியை குறைக்கும் என்று தெரிகிறது.
அத்துடன் உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் துறைக்கும் சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.