Publish Date: Tue, 02 Dec 2008 (13:51 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (13:51 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா சரிந்தது.
பங்குச் சந்தை சரிவினால் டாலரின் தேவை அதிகரித்தது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.50.53/50.54 என்ற அளவில் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 25 பைசா அதிகம்.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 50.28/50.29 பைசா.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 50.40 முதல் ரூ.50.65 என்ற அளவில் விற்பனையானது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.50.52 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.72
100 யென் மதிப்பு ரூ.54.30
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.75.08.