சென்னை: இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் ஏற்றுமதி நவம்பர் மாதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனம், நவம்பர் மாதத்தில் 20,911 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இது சென்ற வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இரண்டு மடங்காகும்,
(சென்ற வருடம் நவம்பரில் 10,408 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது)
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்றுமதி 54 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆனால் உள்நாட்டில் விற்பனை குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 98,402 இரண்டு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற நவம்பருடன் ஒப்பிடுகையில் குறைவு.
(சென்ற வருடம் நவம்பரில் 1,12,766 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது).
இதில் 45,276 மோட்டார் பைக் விற்பனை செய்துள்ளது. (சென்ற நவம்பர் 57,113).
இந்தியாவில் பொதுவாக உள்ள நெருக்கடி, வட்டி உயர்வு, கடன் கிடைப்பதில் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், டி.வி.எஸ் நிறுவனம் உட்பட எல்லா நிறுவனங்களின் வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளன.