Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம்- காங். கோரிக்கை

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம்- காங். கோரிக்கை
, திங்கள், 1 டிசம்பர் 2008 (09:48 IST)
கோவை: தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்க மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நிதி அமைச்சருக்கு, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.சின்னையன் அனுப்பியுள்ள வேண்டுகோளில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், தமிழக பஞ்சாலைகளபல்வேறு நெருக்கடி காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலஉள்ளன. எனவே, அசல் மற்றும் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதோடு சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியைக் குறைப்பதைப் போல, நூற்பாலைகளுக்கும் வட்டியைக் குறைக்க வேண்டும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க வேண்டும்.

அதேபோல வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, சிலிண்டருக்கு ரூ.50 குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil