கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மிருகண்டா அணை நிரம்பியுள்ளது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ராஜேந்திரன், தானிப்பாடி அருகேயுள்ள சாத்தனூர் அணையை மாவட்ட வருவாய் அலுவலர் கோ. தாமரை, வருவாய் கோட்டாட்சியர் பி. அர்ச்சுணன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாத்தனூர் அணை நீர்மட்டம் தற்போது 115 அடியாக உள்ளது. செண்பகத்தோப்பு, குப்பநத்தம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் 60 விழுக்காடு ஏரிகள் நிரம்பியுள்ளன. சாலைகள், விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழை மரங்கள் போளூர் பகுதியில், வசூர், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் சேதம் அடைந்துள்ளன என்று தெரிவித்தார்.