Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணவீக்கம் 8.84% குறைந்தது

Advertiesment
பணவீக்கம் 8.84% குறைந்தது
, வியாழன், 27 நவம்பர் 2008 (15:42 IST)
புது டெல்லி: மொத்த விலை அட்டவணையின் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம், தொடர்ந்து மூன்று வாரங்களாக குறைந்துள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 8.84 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 8.09% ஆக இருந்தது.

மொத்த விலை அட்டவணையில் நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், சமையல் எண்ணெய், ரப்பர், இரும்பு, உருக்கு போன்ற உலோகங்கள், பழம், கடல் மீன், தேயிலை விலை குறைந்துள்ளது.

மத்திய அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், எரி எண்ணெய், நாப்தா போன்றவைகளின் விலையில் மாற்றமில்லை.

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய விபரம் நாளை வெளியிடப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று வீட்டு கடன் கொடுக்கும் முன்னணி நிறுவனமான ஹெச்.டி.எப்.சியின் சேர்மன் தீபக் பரேக் கூறுகையில், வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி குறைக்கப்படாது. நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவு அதிகமாக உள்ளது. இது குறைந்தால், நாங்கள் வட்டியை குறைப்போம் என்று கூறினார்.

ஏற்கனவே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான கே.வி.காமத், ரிசர்வ் வங்கி வட்டியை 2 முதல் 3 விழுக்காடு வரை குறைக்க வேண்டும். அத்துடன் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்து கிரிசல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆய்வாளர் டி.கே. ஜோஷி கூறுகையில், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வருட இறுதிக்குள் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான (ரிபோ) வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் நிதி சந்தையின் பணப்புழக்கத்தை பொறுத்து, வங்கிகளின் இருப்பு விகிதத்தையும் குறைக்கும் என்று தெரிவித்தார்.

தற்போது உள்ள பணவீக்கத்தின் அளவு, தாங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹெச்.டி.எப்.சி வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அபிக் பருவா கூறுகையில், நாங்கள் எதிர் பார்த்த அளவை விட, பணவீக்கம் உயர்வாக உள்ளது. வரும் ஜனவரி இறுதிக்குள் 7 முதல் 7.5 விழுக்காடாக குறையும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil