Publish Date: Wed, 26 Nov 2008 (16:33 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (16:31 IST)
புது டெல்லி: தெருவோர உணவு கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தும், நடவடிக்கைகளை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சகம் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் எடுத்துள்ளது.
அதே நேரத்தில் இந்த அமைச்சகம் உணவுப் பொருட்களை தெருவோர கடைகளில் விற்கும் வியாபாரிகளின் நலனையும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பான உணவுப் பொருட்களை அளிப்பதற்கு இதற்கான நகரங்களை உருவாக்குவது, தெரு கடைகளில் உணவுப் பொருட்களை சிறந்த முறையில் விற்பனை செய்வதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வது ஆகிய இரண்டு திட்டங்களை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி தெருவோர கடைகளில் உணவுப் பொருட்களை விற்பவர்களில் 1,000 பேரை சில நகரங்களில் இருந்து தெரிந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி ஆகியவை அளிக்கப்படுகின்றன.
அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் ஆக்ரா, தில்லி உட்பட 9 நகரங்களில் செயல்பட உள்ளது.
இந்த திட்டத்தில், தற்போதுள்ள உணவு விற்பனை செய்யும் கடைகளை மேம்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. அத்துடன் மின் வசதி மற்றும் நவீன மின்சார இயந்திர கருவிகளை வழங்குவது, பாதுகாப்பான குடிநீர் அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.
தற்போது செயல்படுத்த திருப்பதி, வாரணாசி ஆகிய இரு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளன.
Akshesh Savaliya
Publish Date: Wed, 26 Nov 2008 (16:33 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (16:31 IST)