Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு?

Advertiesment
20 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு?
, புதன், 26 நவம்பர் 2008 (13:49 IST)
நாகப்பட்டினம்: காவிரி பாசன பகுதிகளில் தாமதமாக நடவு, விதைப்பு ஆன பகுதிகளில் உள்ள சுமார் 20 ஆயிரம் பரப்பளவு நெற் பயிர்கள் தண்ணீர் தேங்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி தஞ்சாவூரில் 250 மி.மீ, திருவிடை மருதூரில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது. காவரி பாசன பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை, கொள்ளிடம்,சீர்காழி உட்பட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து காவிரி பாசன பகுதி விவசாயிகள் நல விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரெங்கநாதன் கூறுகையில், இந்த மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக் குறையால் தாளடி பருவத்தில் 32 ஆயிரம் ஹெக்டேர், சம்பா பருவத்தில் 25,000 ஹெக்டேரில் தாமதமாக விதைப்பு நடந்தது. இந்த பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் நீடாமங்கலம், வலங்கைமான், திருவாரூர், நன்னிலம் மன்னார்குடி போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் பார்வையிட்டார். இந்த பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பொதுப் பணித்துறை அதிகாரிகளை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளம் பருவத்தில் உள்ள நெற் பயிர்கள் பாதிக்க வாய்ப்பில்லை. இவை மழை தொடர்ந்தால் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோனம், திருவையாறு, தஞ்சை, திருத்துறைப் பூண்டி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல் வயல்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் ஆகிய பகுதிகளில் கடுமையான அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த பகுதியில் தற்போது பெய்துள்ள மழை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil