Newsworld Finance News 0811 25 1081125061_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 37 பைசா உயர்வு!

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:21 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 49.72 பைசாவாக இருந்தது.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.50.09.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் சாதகமான நிலை இருந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இன்று பங்குகளை விற்பனை செய்யமாட்டார்கள் என்று கருதி, வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. இதுவும் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.97 பைச
1 யூரோ மதிப்பு ரூ.64.21
100 யென் மதிப்பு ரூ.51.87
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.75.45.

Share this Story:

Follow Webdunia tamil