மும்பை: இந்த வருடம் பருத்தி வரத்து குறைந்துள்ளது.
இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India) நவம்பர் 22 ஆம் தேதி நிலவரப்படி 48 லட்சம் பொதி (1 பொதி-170 கிலோ) பருத்தி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இது மேலும் கூறுகையில், சென்ற வருடம் இதே நேரத்தில் 62 லட்சம் பொதி பருத்தி விற்பனைக்கு வந்தது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 22.6 விழுக்காடு குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் குஜராத் மாநிலத்தில் இருந்து பருத்தி விற்பனைக்கு குறைவாக வந்ததே என்று இநதிய பருத்தி கழகம் அறிவித்துள்ளது.