மும்பை: பருத்திக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை (கொள்முதல் விலை) யோசனை இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவித்துள்ள பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குறைக்க வேண்டும் என்று இந்திய ஜவுளி தொழில்களின் கூட்டமைப்பு, குஜராத் ஜின்னர்ஸ் அசோசிசன் உட்பட பல அமைப்புக்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில் மும்பையில் நேற்று பண்டக சந்தைகளின் மாநாட்டை துவக்கி வைக்க வந்த மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் செயதியாளர்களீடம் பேசுகையில், பருத்திக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மாற்றி அமைக்கும் யோசனை அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பருத்திக்கான விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அதே நேரத்தில் ஜவுளி தொழில் பிரிவுகளின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு முன், விவசாயிகளின் நலன் பாதுகாக்கபட வேண்டும். இந்த வருடம் அதிக அளவு பருத்தி தேவைப்பாட்டால், இதை ஈடுகட்டும் அளவிற்கு, சென்ற வருட இருப்பு இருக்கிறது என்று சரத் பவார் தெரிவித்தார்.
அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்த வருடம் ஜவுளி துறை ஏற்றுமதி குறையும் என்று தெரிகிறது.
மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பருத்திக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது. இதனால் சென்ற வருட விலையுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் பருத்தி விலை 30 முதல் 35 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் பருத்தி விலை குறைந்து வருகிறது. உலக அளவில் பருத்தி பயன்பாடு 3 விழுக்காடு வரை குறையும். இந்த வருடம் பருத்தி தேவை 25.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.