புது தில்லி: இந்த மாதம் 1-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான 10 நாட்களில் ரயில்வேத் துறையின் வருவாய் ரூ.2027.77 கோடியாக அதிகரித்துள்ளது.
இது சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 1 முதல் 10 ஆம் தேதி வரை ஒப்பிடுகையில் 8.77 விழுக்காடு அதிகம்.
சென்ற நவம்பரில் ரயில்வே வருவாய் ரூ.1864.32 கோடியாக இருந்தது.
இந்த நவம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேக்கு ரூ.1308.24 கோடி கிடைத்துள்ளது. (கடந்த ஆண்டு ரூ.1270,79 கோடி).
இதே போல் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேக்கு ரூ.650.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த 10 நாட்களில் 206.36 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.67 விழுக்காடு அதிகம்.