மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 பைசா சரிந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ.50.40 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட, 38 பைசா குறைவு.
நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது இருந்த 1 டாலரின் விலை ரூ.50.02.
அந்நியச் செலவாணி சந்தையில் நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்திப்பதால், பொதுத்துறை வங்கிகள் டாலரை விற்பனை செய்தாலும் கூட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது தவிர்க்க முடியாதது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.50.52 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.63.12
100 யென் மதிப்பு ரூ.53.12
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.75.54.