Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள் விலை உயர்வு!

மஞ்சள் விலை உயர்வு!
, புதன், 19 நவம்பர் 2008 (16:07 IST)
பிரபல பண்டக சந்தை கணிப்பு நிறுவனமான ஷேர்கான் காமோடிட்டி ( ) நிறுவனத்தின் கணிப்புகளை கீழே கொடுத்துளோம்.

மலேசியாவில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 6,49,071 டன் பாமாயில் ஏற்றுமதி ஆகி உள்ளது. இது முந்தைய மாதத்தை விட 18 விழுக்காடு அதிகம்.

மகாராஷ்டிராவில் நான்கு மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து மக்காச் சோளம் கொள்முதல் செய்வது துவங்கி உள்ளது. ஆனால் இதன் விலை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைந்துள்ளன.

உஞ்சா மொத்த விற்பனை சந்தையில் சீரகம் விலை அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் முன்பேர சந்தையில் சீரகம் விலை அதிகரித்ததே. இங்கு 20 கிலோ கொண்ட சீரக மூட்டையின் விலை ரூ.1,960 முதல் ரூ.1,920 வரை இருந்தது.

சீரகம் 6 லட்சம் மூட்டை வரை இருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

▄ சீரகம் விதைப்பு தொடங்கியுள்ளது. இதறகு தகுந்தார் போல் பருவநிலையும் சாதகமாக உள்ளன. இதே மாதிரி பருவநிலை சாதகமாக இருந்தால் 28 லட்சம் மூட்டை வரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட 10 விழுக்காடு அதிகம்.

▄ தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளது. அடுத்த வரும் மாதங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த சமயத்தில் விற்பனை உயர வாய்ப்பு உள்ளது.

▄ அதே நேரத்தில் பருவநிலையை பொறுத்து சீரகத்தின் விலை அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்றுமதி குறையும். அதே நேரத்தில் உற்பத்தி அதிகரிப்பதால் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

. ▄ மஞ்சளுக்கு உள்நாட்டு சந்தையில் அதிக தேவை இருப்பதாலும், அந்நிய நாடுகளின் இறக்குமதியாளர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளதால், இதன் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை அதிகரித்து வருகிறது. தற்போது 1 குவினடால் விலை ரூ.3,800 ஆக அதிகரித்துள்ளது. முன்பு இதன் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைந்தது. மஞ்சள் விலை குவின்டால் 4,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

▄ எனினும் புதிதாக விளைச்சலான மஞ்சளின் வரத்தை பொறுத்து, இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

▄ மஞ்சள் சாகுபடி முடிந்து விட்டது. புதிய மஞ்சள் ஜனவரி-பிப்ரவரியில் விற்பனைக்கு வரும். இந்த வருடம் 48 லட்சம் மூட்டை விளைச்சல் இருக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இது சென்ற வருடத்தை விட 10 விழுக்காடு அதிகம


Share this Story:

Follow Webdunia tamil