Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்-ராகுல் பஜாஜ்.

உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்-ராகுல் பஜாஜ்.
, திங்கள், 17 நவம்பர் 2008 (13:26 IST)
புது டெல்லி:பொருளாதாரத்தின் தேக்க நிலையை மாற்ற மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். இதனால் பொருட்களின் விலை குறையும். பொருட்களின் விலை குறைவதால், இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்று ராகுல் பஜாஜ் கூறினார்.

புது டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு-2008 [India Economic Summit 2008] நடபெற்றது.

இதில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மன் ராகுல் பஜாஜ் உரையாற்றும் போது, மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதை விட, வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

நாம் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களால், பணவீக்கத்தையும் இறக்குமதி செய்து வருகின்றோம் என்று கூறி வந்தோம். இப்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இது நாம் வளர்ச்சியை பாதையை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம். ரிசர்வ் வங்கி மேலும் வங்கிகளின் இருப்பு விகிதம். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனான ரிபோ வட்டி விகிதம், எஸ்.எல்.ஆர் போன்றவைகளை குறைக்க வேண்டும்.

அத்துடன் உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்த வேண்டும் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும் போது, அரசு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது அல்லது ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு பதிலாக, அவை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இதை செய்வதற்கு வசதியாகவும், பொருட்களின் விற்பனை அதிகரிக்கவும், அரசு உற்பத்தி வரி போன்ற மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ராகுல் பஜாஜ் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil