Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையதளம் மூலம் விற்பனை விபரம் சமர்ப்பிக்கும் வசதி!

இணையதளம் மூலம் விற்பனை விபரம் சமர்ப்பிக்கும் வசதி!
, வெள்ளி, 14 நவம்பர் 2008 (13:35 IST)
கோவை : கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும், இணையம் மூலமாக விற்பனை விவரங்களை சமர்பிக்க வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் (வாட்) அமலில் உள்ளது. வியாபாரிகள், அவர்களது விற்பனை தொடர்பான விவரங்களை, ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குள் வரிவிதிப்பு அலுவலகங்களில் சமர்ப்பித்து வருகின்றனர்.

வணிகவரித் துறையை கணினிமயமாக்கும் முயற்சியின் பயனாக, தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகள் மட்டுமே இணையதளம் மூலமாக விற்பனை விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இணையதளம் மூலம் விற்பனை விபரங்களை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணையதள வசதி இல்லாத வியாபாரிகள் வணிக வரி அலுவலகத்தில் அமைந்துள்ள கணினி மையத்தில் வாயிலாக விற்பனை விபரங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரி இணை ஆணையர்கள் பு.ஏகாம்பரம், ஆஷிஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil