Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழில் துறை உற்பத்தி 4.8% உயர்வு.

தொழில் துறை உற்பத்தி 4.8%  உயர்வு.
, புதன், 12 நவம்பர் 2008 (17:57 IST)
பது டெல்லி: இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 4.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இது ஆகஸ்ட் மாதத்தில் 1.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தொழில் துறை உற்பத்தி 7.45% ஆக இருந்தது.

இந்த செப்டம்பர் மாதத்தில் இயந்திரங்கள், தளவாடங்கள் உற்பத்தி 18.8% அதிகரித்துள்ளது.

அதே போல் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 5.6%, சுரங்கங்களில் தாது பொருட்கள் தோண்டி எடுக்கும் துறை உற்பத்தி 5.7% அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் வளர்ச்சி 4.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil