Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவர்சில்வர் இறக்குமதி வரிக்கு எதிர்ப்பு!

எவர்சில்வர் இறக்குமதி வரிக்கு எதிர்ப்பு!
, புதன், 12 நவம்பர் 2008 (15:08 IST)
மும்பை: எவர்சில்வர் என்று அழைக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடு, கம்பி போன்றவைகளுக்கு இறக்குமதி அதிகரிக்க கூடாது என்று, இதனை பயன்படுத்தும் சிறு தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த தொழில்களின் சங்கமான பிராசஸ் பிளான்ட் அண்ட் மெஷினரி அசோசிசன் ஆப் இந்தியா [Process Plant and Machinery Association of India (PPMAI)] செயலாளர் வி.பி.ராமச்சந்திரன், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஷ்வான், உள்நாட்டு உருக்காலைகளை காப்பாற்ற, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எவர்சில்வர் பொருட்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கும் யோசனையை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி விதிப்பதால், எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.

இந்தியாவில் உள்ள தொழில் சாலைகள், அயர்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிக உயர்தர எவர்சில்வர் தகடு, கம்பி போன்றவைகளை பயன்படுத்துகின்றன.

இந்த வகை உயர்ரக எவர்சில்வர் பொருட்களை, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிப்பதில்லை. சேலம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நிறுவனம் மட்டுமே உயர்ரக எவர்சில்வர் பொருட்களை தயாரிக்கிறது. இதுவும் கூட சொந்தமாக “சிலாப்” களை தயாரிப்பதில்லை.

இது வரை இறக்குமதி செய்யும் எவர்சில்வருக்கு இறக்குமதி வரி உயர்த்தப்படவில்லை. இவ்வாறு உயர்த்துவதால், இதுவரைக்கும் ஏகப்பிரதியாக உள்ள ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே சாதகமாக அமையும்.

அத்துடன், அயல்நாடுகளில் இருந்து இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் உயர்ரக மற்றும் அளவால், உள்நாட்டு நிறுவனங்கள் நேரடியாத பாதிக்க வாய்ப்பில்லை.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. 1 டாலர் ரூ.40 என்ற அளவில் இருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வினால் ஏற்கனவே, எவர்சில்வர் பொருட்களை இறக்குமதி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு எவர்சில்வர் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அந்நிய இறக்குமதின் பாதிப்பு ஏற்படாத அளவு பாதுகாப்பு உள்ளது. எப்படியெனில், 5 விழுக்காடு இறக்குமதி வரி, அத்துடன் ரூபாயின் மதிப்பு குறைந்ததால் 20 விழுக்காடு விலை அதிகரித்துள்ளது. மொத்தம் 25 விழுக்காடு விலை பாதுகாப்பு உள்ளது.

அத்துடன் உள்நாட்டு உருக்காலைகள் பாதிக்கப்படாது. ஏனெனில் இவை எவர்சில்வர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களான நிக்கல், பெர்ரோ-நிக்கல், உருகும் தன்மையுள்ள கழிவு உருக்கு ஆகியவைகளை இறக்குமதி செய்கின்றன. இவைகளின் விலை கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது.

எவர்சில்வர் பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால், இதன் விளைவாக பொருட்களின் விலை உயரும். பாத்திரங்கள், இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள், இயந்திரங்கள் குறிப்பாக பால் பண்ணை, பெட்ரோலிய நிறுவனம், மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தொழில்கள் போன்றவை பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இறக்குமதி வரி விதிப்பதால், அரசின் முயற்சிக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, வி.பி.ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil