சென்னை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட புதிய பத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.
இதில் புதிய கவர்னரின் கையெழுத்துடன், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட பத்து ரூபாய் நோட்டில் உள்ள புதிய பாகாப்பு அம்சங்களும் இருக்கும். இந்த மகாத்மா காந்தி திருவுருவப் படம் அச்சிட்ட நோட்டுகளின் வரிசையில் இடம் பெற்று இருக்கும் வடிவம், பிற அம்சங்கள் அனைத்தும் இருக்கும். வேறு புதிய மாற்றங்கள் இருக்காது. இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனத்து பத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லத் தக்கவையே.