Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கம் 10.72% ஆக உயர்வு!

பணவீக்கம் 10.72% ஆக உயர்வு!
, வியாழன், 6 நவம்பர் 2008 (17:36 IST)
நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சற்றே உயர்ந்து 10.72% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த விகிதம் 10.68 ஆக இருந்தது.

கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்த பணவீக்க விகிதம், தற்போது சற்றே உயர்ந்துள்ளது. இதற்கு உணவுப் பொருட்கள் பட்டியலில் வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வே காரணம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனப் பிரிவில் உள்ள பைக், ஆட்டோ ரிக்-ஷா ஆகியவற்றின் விலை உயர்ந்திருந்தாலும், சமையலுக்கு பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள், சிமெண்ட் விலை சரிந்துள்ளது. எஃகு, எரிபொருட்கள் விலையில் மாற்றமில்லை என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil